ஆப்கானிஸ்தானில் பாரிய கார்குண்டுத் தாக்குதல்!
Monday, June 18th, 2018ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நங்கஹார் மாகாணத்தில் இந்த கார் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
றமழான் பெருநாளை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் தலீபான்களுக்கும் இடையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களும் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளும், தலீபான்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் இந்த கார் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் அனைத்து தரப்புக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சீனாவைில் கைதான கனேடிய தம்பதிகள் விடுதலை!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த 'இஸ்ரோ'!
|
|