ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பாரிய தாக்குதல்!

Monday, April 16th, 2018

ஆப்கானிஸ்தானில் உள்ள இரு சோதனைச்சாவடிகள் மீது தீவிரவாதிகள் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள கன்ஸி மாகாணத்துக்குட்பட்ட ஜக்ஹாட்டு மாவட்டத்தில் உள்ள இரு சோதனைச்சாவடிகள் மீது மேற்கொள்ளப்பட்ட  குறித்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தலிபான் உரிமை கோரியுள்ளது.

குறித்த தாக்குதலை வாகனங்களில் வருகைதந்த தீவிரவாதிகளே மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.