ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: ஊடகவியலாளர் பலர் பலி?

Monday, April 30th, 2018

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 21 பேர் உயிரிழந்துனர்.

காபுலின் சஸ்டாரக் மாவட்டத்தில் உந்துருளியில் பிரவேசித்த ஒருவர் முதலாவது குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார். அதனை அடுத்து குறித்த பிரதேசத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் மற்றும்ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து இரண்டாது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் அந்த நாட்டின் முக்கிய படப்பிடிப்பாளர் உட்பட பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது தாக்குதலானது ஊடகவியலாளர்களை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

Related posts: