ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஆராய்கின்றது ஐநா!
Wednesday, April 19th, 2023ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்து ஐநா சிந்திக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான் ஆப்கான் பெண்கள் ஐநாவில் பணிபுரிவதற்கான அனுமதியை வழங்காவிட்டால் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மிகவும் கவலையை தரக்கூடிய முடிவை எடுப்பதற்கு ஐநா தயாராகிவருகின்றது என ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.
பெண்கள் ஐநாவில் பணிபுரிவதற்கான தடையை நீக்குவதற்காக தலிபானுடன் ஐநா பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது என யுஎன்டிபியின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் முழுஅமைப்பும் ஆப்கானில் தொடர்ந்தும் பணிபுரிய முடியுமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ள அவர் மனித உரிமைகள் குறித்த அடிப்படை கொள்கைகள் பற்றி எந்த சமரசத்தி;ற்கும் இடமில்லை பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|