ஆப்கானில் 30 சிவிலியன்கள் ஐ.எஸ் குழுவினரால் கடத்திக் கொலை!

ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) அமைப்புடன் தொடர்புபட்ட ஆயுதக் குழு ஒன்று 30 பேரை கடத்தி கொலை செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மலைப் பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற சிவிலியன்கள் மற்றும் இரு ஆடுகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஐ.எஸ் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார். எனினும் இதற்கு பழி தீர்க்க ஆயுததாரிகள் சிவிலியன்களை கொன்றிருப்பதாக கோர் ஆளுநர் காசே குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானில் ஐ.எஸ் ஆதரவை பெருக்கி வருவதோடு அது தலிபான்களுக்கு சவாலாக உள்ளது. கொல்லப்பட்டிருக்கும் சிவிலியன்களில் சிறுவர்களும் இருப்பதாக காசே தெரிவித்தார். கிழக்கு ஆப்கானின் நன்கர்ஹார் மாகாணத்திலேயே ஐ.எஸ் செயற்பாடுகள் அதிகரித்திருந்த போதும் மத்திய ஆப்கானில் அதன் செல்வாக்கு குறைவாகவே இருந்து வருகிறது.
கடந்த 2015 ஜனவரி தொடக்கம் ஆப்கானில் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ்ஸுக்கு இடையிலான மோதல் அடிக்கடி இடம்பெற்று வருகிறது. தலிபான் தலைவர்கள் பலரும் ஐ.எஸ் குழுவில் இணைந்த நிலையில் தலிபான் உறுப்பினர்களை இணைக்கும் முயற்களிலும் ஈடுபடுவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். கோரில் இடம்பெற்ற சிவிலியன்களில் கொலைக்கு தாம் பொறுப்பில்லை என்று தலிபான் பேச்சாளர் சுபிஹுல்லாஹ் முஜாஹித் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|