ஆப்கானில் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்!

Wednesday, August 4th, 2021

ஆப்கான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் இனந்தெரியநபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கான் தலைநகரில் கடும் பாதுகாப்புடன் காணப்படும் கிறீன்ஜோனில் உள்ள அமைச்சரின் வீட்டின் முன்னாள் கார்குண்டுதாக்குதல்இடம்பெற்றதுபின்னர்துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வேளை பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா ஹான் முகமடி வீட்டில் இருக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர் தாக்குதலை மேற்கொண்டவர்கள் கொல்லப்பட்டனர் என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர் . 11 பேர் மருத்துவமனைகளில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவ மனைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் இடம்பெற்ற விதம் தலிபானே இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது என அமெரி;க்கா

ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் தலிபானின் தாக்குதலை முறியடிப்பது தொடர்பாக அமைச்சரின் வீட்டில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடயிருந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: