ஆப்கானில் இருந்து துருப்பினர் திருப்பி அழைக்கப்பட மாட்டார்கள் – ட்ரம்ப்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்பினர் உடனடியாக திருப்பி அழைக்கப்பட மாட்டார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னர் திட்டமிட்டது போல துருப்பினரை மீள அழைக்கும் பட்சத்தில், வெற்றிடம் ஒன்று உருவாகும் எனவும், அது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில், போராடி வெற்றி பெற்றதன் பின்னரே துருப்பினர் தாயகத்திற்கு மீள அழைக்கப்படுவர். அமெரிக்க துருப்பினருக்கு ஈராக்கில் ஏற்பட்ட பின்னடைவு போன்று ஆப்கானிஸ்தானிலும் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது
எனினும், ஆப்கானிஸ்தானுடன் இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அமெரிக்கா ஆக்கபூர்வமான செயற்பாட்டை மேற்கொள்ளும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்ப வேண்டுமானால், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டே ஆகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|