ஆப்கன் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி!

Sunday, November 6th, 2016

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களின் விளைவாக, பொதுமக்கள் பலியாகி இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குண்டூஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட தாலிபன் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கன் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில், குறைந்தது பாதி பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபன் அமைப்பை சேர்ந்த தளபதிகளும், 3 ஆப்கன் மற்றும் இரண்டு அமெரிக்க படையினரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு வருந்துவதாகவும், இதுகுறித்த அமெரிக்க – ஆப்கன் கூட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் அமெரிக்க தளபதி ஜெனரல் ஜான் நிக்கோல்சன் தெரிவித்துள்ளார்.

_92290096_gettyimages-101312520

Related posts: