ஆபிரிக்க நாடுகளில் கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு!

Friday, March 15th, 2019

தென் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் தொடர்ந்தும் பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை அப்பகுதியில் 115 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 08 லட்சத்து 43 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

தென் கிழக்கு ஆபிரிக்க நாடுகளான மொசாம்பிக் நாட்டில் 66 பேரும் மலாவி நாட்டில் 45 பேரும் தென் ஆபிரிக்காவில் 04 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடுமையான மழை மற்றும் சூறாவளி காரணமாக அந்நாட்டிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்காவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மொசாம்பிக்கில் வெள்ளம் காரணமாக 5,756 வீடுகள் முற்றாக அழிந்துள்ள நிலையில் 15,467 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இதனால் 141,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.