ஆத்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல் : கண்ணீர் சிந்தும் பிரான்ஸ்!
Saturday, July 16th, 2016
பிரான்ஸில் கடற்கரைக்கு அருகில் உள்ள நைஸ் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, மூன்று நாட்கள் துக்க தினம் அனுசரிப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
பாஸ்டில் தினத்தை குறிக்கும் வகையில் நடந்த வாண வேடிக்கையின் இறுதியில் ஒரு கூட்டத்திற்குள் கனரக வாகனம் நுழைந்து, குழந்தைகள் உட்பட, குறைந்தது 84 பேரை கொன்றது.
வாகன ஓட்டுநர் வளைந்து சென்று சாலை மற்றும் நடைபாதையில் இரண்டு கிலோமீட்டருக்கு சென்று பாதசாரிகள் மீது வண்டியைச் செலுத்தினர்.
ஓட்டுநரை காவல் துறை அதிகாரிகள் சுடுவதற்கு முன் அவர் சுடத் தொடங்கினர்.அந்த லாரியில் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஹொல்லாந்தும் பிரதமர் மானுவேல் வால்ஸும் நைஸ் நகருக்கு சென்றுள்ளனர். அவர்கள் முன்னதாக பாரிசில் பாதுகாப்பு பற்றிய அவசர கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பின்னர் பிரதமர் பேசுகையில், தேசிய தினத்தில் நடந்த தாக்குதல் பிரான்ஸின் ஆத்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார். ஆனால் இந்த நாடு வன்முறையால் தன்னுடைய ஸ்திரத்தன்மையை இழக்க அனுமதிக்காது. பிரான்ஸ் எப்போதும் தீவிரவாத அச்சுறுத்தலால் நிலைகுலைந்துவிடாது என்றார்.
Related posts:
|
|