ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் மதகுருவுக்கு முக்கிய பங்கு – எர்துவான் !

Sunday, July 24th, 2016
துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதியை திட்டமிட்டவர் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் மதகுரு ஃபெத்துல்லா குலன் என்பதை அதில் ஈடுபட்டவர்கள் ஒப்புக் கொண்டு வருவதாக அதிபர் எர்துவான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி நடந்த போது, துருக்கி ராணுவத்தின் தளபதியை கடத்தி மதகுருவிடம் பேச சம்மதிக்க சதியாளர்கள் முயற்சித்ததாக அதிபர் எர்துவான் கூறியுள்ளார். ஆனால், அந்த மதகுரு இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தன்னுடைய ஈடுபாட்டை மறுத்துள்ளார்.

முன்னர், அந்த மதகுருவின் அமைப்புடன் தொடர்பில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை மூடிவிட்டதாக துருக்கி அதிகாரிகள் அறிவித்தனர்.குலனை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி, அமெரிக்காவிடம் துருக்கி மிக விரைவில் முறையான கோரிக்கையை முன்வைக்கும் என்று துருக்கி தெரிவித்துள்ளது.

Related posts: