ஆட்கடத்தல் மேற்கொள்பவர்கள் தொடர்பான விசாரணை!

Thursday, August 25th, 2016

நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு ஆட்களை கடத்தும் நபர்கள் பற்றிய விசாரணைகளை நேபாள பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் தொழிலில் ஈடுபடுத்தவே நேபாள பிரஜைகள் நாட்டுக்கு கடத்தப்படுகின்றனர். இவ்வாறு இலங்கைக்கு ஆட்களை கடத்தும் நபர்கள் தொடர்பிலான எவ்வித தகவல்களும் நேபாள பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேபாளத்திலிருந்து கடத்தப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 19 நேபாள பிரஜைகளை இலங்கை பொலிஸார் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: