ஆங் சான் சூச்சியின் குடியுரிமையை திரும்பப் பெறுகிறது கனடா!

Sunday, September 30th, 2018

மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட பாராளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மியன்மாரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த, முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியன்மாரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக ஆங் சான் சூச்சிக்கு 1991இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வருட காலமாக மியான்மரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் இதுவரை சுமார் ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியன்மாரை விட்டு வெளியேறியுள்ளனர்.

Related posts: