ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற குடியேற்றவாசிகள் 27 பேர் பலி !

Thursday, November 25th, 2021

பிரான்ஸ் பொலிஸார் குடியேற்றவாசிகள் படகுகளில் புறப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது பிரான்சிலிருந்து ஆங்கில கால்வாயை கடந்து படகுகள் மூலம் பிரிட்டனிற்குள் நுழைய முயன்ற குடியேற்றவாசிகளில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியேற்றவாசிகளின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு ஆள்கடத்தல்காரர்கள் பிரான்ஸ் பெல்ஜியம் எல்லையில் உள்ள டன்கிரிக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஐந்துபெண்களும் ஒரு யுவதியும் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் பொலிஸார் குடியேற்றவாசிகள் படகுகளில் புறப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அளவுக்கதிகமானவர்கள் ஏற்றப்பட்ட படகு கடும் மழை குளிரிற்கு மத்தியில் நடுக்கடலில் மூழ்கியது எனவும் மீனவர்கள் அதனை கண்டனர் எனவும் பின்னர் கரையோர காவல் கப்பல்களும் ஹெலிக்கொப்டர்களும் அவர்களை மீட்க விரைந்தன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆங்கிலகால்வாயில் படகு கவிழ்ந்ததில் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளமை நேற்றைய சம்பவத்திலேயே இடம்பெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரிட்டிஸ் பிரான்ஸ் தலைவர்கள் இந்த துயர சம்பவத்திற்கு ஒருநாட்டின் மீது மற்றவர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுடனான தொலைபேசி உரையாடலின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இரு நாடுகளினதும் கூட்டுபொறுப்பை வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டனின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இந்த துயர சம்பவம் அரசியல் நோக்கங்களிற்கு பயன்படாது என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில கால்வாயின் கரையோர பகுதிகளை பிரான்ஸ் கண்காணிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் புதன்கிழமை சம்பவம் பிரான்ஸ் அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: