ஆகஸ்ட் முதல் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை – இந்திய மத்திய அரசு!

Tuesday, June 25th, 2019

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்தது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது, நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவு உருவாகிறது. அவற்றில் 13 ஆயிரம் தொன் மட்டுமே சேகரிக்கப்படுகிறது.

எனவே, காற்று மாசை கட்டுப்படுத்தும்விதமாக, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts: