அவுஸ்திரேலிய படையினரும் ஆப்கானிலிருந்து முற்றாக வெளியேறுகின்றனர்.

Thursday, April 15th, 2021

அமெரிக்காவின் அறிவிப்பின் அடிப்படையில் அவுஸ்திரேலிய படையினரும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் மாதம் வெளியேறவுள்ளனர்
பிரதமர் ஸ்கொட்மொறிசன் இதனை அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில உள்ள நேட்டோ தலைமையிலான படையணிக்கான பங்களிப்பை அவுஸ்திரேலியா முடிவிற்கு கொண்டுவரவுளளது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் படையினரை 1500லிருந்து 80 ஆக குறைத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவையும் ஏனைய சகாக்களையும் பின்பற்றி 2021 செப்டம் இறுதிக்குள் எஞ்சியுள்ள படையினரும் வெளியேறிவிடுவார்கள் என அவர் அறிவித்துள்ளார்.

Related posts: