அவுஸ்திரேலிய செனட் சபையின் தலைவர் பதவி விலக முடிவு!

தமக்கு பிரித்தானிய இரட்டை குடியுரிமை இருப்பதனை உறுதிப்படுத்திய நிலையில் அவுஸ்திரேலிய செனட் சபையின் தலைவர் ஸ்டிஃபன் பரி (Stephen Parry) தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்
இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் அரசியலில் ஈடுபட முடியாது என அவுஸ்திரேலிய அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பொன்றுக்கு அமைய, பிரதி பிரதமர் பார்னபி ஜொய்ஸ் (Stephen Parry) உட்பட 5 அரசியல்வாதிகளின் தேர்தல் தெரிவு செல்லுபடியற்றது என தீர்ப்பு வழங்கியிருந்தது
இந்தநிலையில், தாம் மன சஞ்சலத்துடன் பதவி விலகுவதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, இவர் இரட்டை குடியுரிமை பெற்றவர் என பிரித்தானிய அரசாங்கமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காட்டுத்தீயால் இந்தோனீசியாவில் அவசரநிலை பிரகடனம்!
அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப்பிற்கு ஹிலரி வாழ்த்து!
பிரெக்ஸிட் விவகாரம் - தெரேசா மேயின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி!
|
|