அவுஸ்திரேலியா நாடாளுமன்றம் கலைப்பு!

அவுஸ்திரேலியா நாட்டில் பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான லிபரல் தேசிய கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பிரதமராக இருந்து வந்த டோனி அப்பாட் உள்கட்சி மோதலில் பதவி இழந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி டர்ன்புல் பிரதமர் பதவி ஏற்றார்.
ஆனால் அங்கு பாராளுமன்ற மேல்-சபையில் புதிய மசோதாக்கள் நிறைவேறுவது தடைப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் கலைக்குமாறு, ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிரதிநிதியான கவர்னர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவிடம் பிரதமர் டர்ன்புல் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று பாராளுமன்றத்தின் இருசபைகளையும் அவர் கலைத்துள்ளதாக நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு ஜூலை மாதம் 2-ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் 150 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையின் 76 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் பொருளாதார வீழ்ச்சி, கல்வி, சுகாதாரம் ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக எதிரொலிக்கும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் தேர்தல் பிரசாரம் நடக்கப்போவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
Related posts:
|
|