அழித்துவிடுங்கள்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை!

Sunday, June 12th, 2016

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களின் மறைவிடங்கள் மீது குண்டுகள் வீச வேண்டும் என அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல்ரஹீல் ஷெரீப், ஆப்கானிஸ்தான் அமெரிக்க படையின் தளபதி ஜான் நிக்கல்சன், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்ட் ஆல்சன் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தலிபான்களின் இருப்பிடத்தை அறிந்து கொண்டு அமெரிக்க குண்டுவீச்சு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்நடத்துவது குறித்து கவலை தெரிவித்த ஷெரீப், பாகிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல் என விமர்சித்தார்.

Related posts: