அல்ஜீரியா ஜனாதிபதி இராஜினாமா!

Wednesday, April 3rd, 2019

அல்ஜீரியா நாட்டின் ஜனாதிபதி அப்தெலாசிஸ் பவுடேபிலிகா  (Abdelaziz Bouteflika) இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஆபிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டில் ஜனாதிபதியான அப்தெலாசிஸ் பவுடேபிலிகா 5-வது முறையாக மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றமைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அல்ஜீரியாவில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்ததனால் மீண்டும் போட்டியிடும் திட்டத்தை திரும்ப பெற்ற அப்தெலாசிஸ், எதிர்வரும் 18- ஆம் திகதி நடைபெற வேண்டிய தேர்தலை ஒத்திவைத்ததாக தெரிவிக்கப்படுகின்றன. எனினும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

அப்தெலாசிஸ் பவுடேலிகா பதவி விலகுவதாக அறிவித்ததும், ஏராளமான பொதுமக்கள் அதை கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அல்ஜீரியா அரசியல் அமைப்பு படி, ஜனாதிபதி பதவி விலகிவிட்டால், பாராளுமன்ற மேலவையின் சபாநாயகர் 90 நாட்கள் இடைக்கால தலைவராக இருப்பதுடன், இந்த 90 நாட்களுக்குள் அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: