அலெப்போ மக்களின் நிலை குறித்து விவாதிக்க அவசர கூட்டம்!

Wednesday, November 30th, 2016
சிரியாவில் உள்ள அலெப்போ நகரில் போராளிகளின் பிடியில் உள்ள இடங்களை நோக்கி அந்நாட்டின் அரசு படைகள் முன்னேறி வரும் வேளையில், அங்கு சிக்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்து விவாதிக்க ஒரு அவசர கூட்டத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் மோதல்கள் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய படுகொலைகளில் ஒன்றாக உருவாகும் சாத்தியம் இருப்பதால் பிரான்ஸ் மற்றும் அதனை நேச நாடுகள் இச்சம்பவத்தை அமைதியாக பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள் என்று பிரான்ஸின் வெளியுறவு அமைச்சரான ஜான் மார்க் அய்ரோ தெரிவித்தார்.
இப்பகுதியில் தொடந்து நடைபெற்று வரும் மோதலினால் 20 ஆயிரம் மக்கள் இங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

_92722820__92714790_mediaitem92712287