அலெப்போவின் முக்கிய விநியோக சாலையிலிருந்து வெளியேறும் இராணுவம்!

Thursday, September 15th, 2016

சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் வசிப்போருக்கு மிக அவசியமான உதவிகள் கொண்டு செல்லப்பட உதவும் வகையில் , அலெப்பவின் முக்கிய நுழைவு சாலைக்கு அருகிலிருந்து சிரிய ராணுவம் மற்றும் போராளி படையினர் தங்களுடைய நிலைகளிலிருந்து பின்வாங்க உள்ளனர்.

சிரியாவில் சமீபத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ள யுத்த நிறுத்த விதிகளின் கீழ் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கான அழுத்தம் வளர்ந்து கொண்டே இருந்தது.

ஆனால், கடந்த புதன்கிழமையன்று, அந்த சாலை வழியாக பயணித்த பிபிசி செய்தியாளர், இந்த பாதை இன்னும் ஆபத்தாக இருப்பதாகவும் , இந்த சூழலில் எந்த பொறுப்புள்ள தொண்டு நிறுவனங்களும் ட்ரக்குகளை உள்ளே அனுப்பாது எனவும் தெரிவித்திருந்தார்.

உணவுப் பொருட்களுடன் இருபது ட்ரக்குகள் அலெப்போவிற்கு நழைய வரிசையாக நின்று கொண்டிருப்பதாகவும், ஆனால் இன்னும் அந்த ட்ரக்குகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் துருக்கியில் உள்ள ஐ.நா உதவிக்குழு அதிகாரி டேவிட் ஸ்வான்சன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

10.2.1

Related posts: