அலட்சியப்போக்கினாலேயே ரஷ்யாவில்  தீ விபத்து – விளாடிமீர் புடின்!

Thursday, March 29th, 2018

ரஷ்யாவின் சைபேரியா ௲ கெமரோவோ பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து அலட்சியப்போக்கினால் நிகழ்ந்த பாரிய குற்றம் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 64 பேர் கொல்லப்பட்டதுடன், அவர்களில் 41 பேர் சிறார்களாவர்.

சம்பவ இடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி புடின் அலட்சியப்போக்கினால் அதிகபடியான மக்களை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது தீ எச்சரிக்கை கருவிகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்ததாகவும், அவசர கதவுகள் திறக்கமுடியாதபடி அடைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையாளர்கள்தெரிவிக்கின்றனர்.

ஆனால் இதுவரை தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இதேவேளை திரைப்பட மண்டபத்தின் அதிகாரிகளை பதவிநீக்க கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

Related posts: