அரை மணி நேரத்தில் நாடே அழிக்கப்படும் – அமெரிக்காவை மிரட்டிய ஈரான்..!

Thursday, July 4th, 2019

அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகாரிக்கும் வகையில் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தலைவரும், வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் தலைவருமான மொஜ்தாபா சோல்னோர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரானின் சமீபத்திய நடவடிக்கையின் மூலம், 2015 உலக சக்திகளுடனான அணுசக்தி ஒப்பந்த வரம்பை ஈரான் மீறியதாக, ஐ.நா-வின் குழு கண்டறிந்த நிலையில், ஈரான் நெருப்புடன் விளையாடுகிறது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

ஒப்பந்த வரம்பை மீறியதால் பிரான்ஸ், பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்கா உடன் அசாரதான சூழல் நிலவி வரும் தருணத்தில், ஈரானிய மூத்த நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தலைவர் மொஜ்தாபா சோல்னோர், அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அரை மணி நேரத்தில் இஸ்ரேல் அழிக்கப்படும் என மொஜ்தாபா சோல்னோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: