அரைமணிநேரம் முன்னேறிய வடகொரியா!

Sunday, May 6th, 2018

வட கொரியா இதுவரை பின்பற்றி வந்த தனி நேர மண்டலத்தை நேற்று நள்ளிரவில் இருந்து மாற்றியுள்ளது.

“உச்சி மாநாட்டின்போது இரு கொரிய தலைவர்களும் சந்தித்துக்கொண்டபோது, வட கொரிய அதிபர் கிம், வரும் மே மாதத்தில் வட கொரியாவின் அணுசக்தி பரிசோதனை தளம் மூடப்படும் என்று தெரிவித்தார்.

தென் கொரியாவைவிட அரை மணிநேரம் வேறுபாடு கொண்ட நேர மண்டலத்தை கொண்டிருக்கும் வட கொரியா, அதை தென்கொரியாவின் நேரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் சம்மதம் தெரிவித்தது.

அதன்படி, தென்கொரிய நேரத்திற்கு இணையாக, வடகொரிய நேரம் அரை மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி இரு கொரிய நாடுகளுக்கும் ஒரே நேர மண்டலம் தான் பொதுவாக கொண்டிருக்கும். நேற்று நள்ளிரவு முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

Related posts: