அருணாச்சல பிரதேச எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டும் சீனா – இந்திய எல்லையில் பிரச்சினை!

Wednesday, May 23rd, 2018

அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளது. அங்கு இந்தியப் பணத்தில் சுமார் ரூ.4 இலட்சம் கோடி மதிப்பிலான கனிம தாதுக்கள் நிறைந்திருக்கின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“டோக்லாம்” பிரச்சினையை அடுத்து இந்தியா, சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா தொடங்கியுள்ளது. அங்கு உட்கட்டமைப்பு பணிகளை அமைப்பதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது.

சுரங்கம் அமையவுள்ள பகுதியில் தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பு மிக்க கனிமங்கள் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 6,000 கோடி டொலர்கள் (சுமார் 4 இலட்சம் கோடி) இருக்கும் என அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி ௲ சீன அதிபர் இருவருக்குமிடையேயான சந்திப்பை அடுத்து இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீனா தங்கச் சுரங்கம் தோண்டுவது மேலும் பிரச்சினையை பெரிதாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: