அரசுக்கு எதிராக போராட்டம் – சூடானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

சூடான் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சூடானில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு பொலிஸார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
Related posts:
சீனாவின் கொள்கைகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை: டிரம்ப்
விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் - ஜெ.தீபா
அருகருகே பறந்த அமெரிக்க - ரஷ்ய போர் விமானங்கள் - சிரிய வான்பரப்பில் கடும் பதற்றம்!
|
|