அரசியல் ஆதிக்கம் மிகுந்த தலைவர் மோடி – பா. சிதம்பரம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் அரசியல் ஆதிக்கம் மிகுந்த தலைவராக உருவாகி இருப்பதை, ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, மும்பை இந்திய வர்த்தக சபை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
5 மாநில தேர்தல் வெற்றிகளால் டெல்லி மேல் சபையில் தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையும் பெறவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர்களால் எந்த பிரேரணையையும் தடையின்றி நிறைவேற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்காக மீதமுள்ள தனது பதவிக் காலத்தில் இன்னும் கடுமையான சீர்திருத்த கொள்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆரம்பிக்கும் என்றும் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எஞ்சிய 24 மற்றும் 27 மாத ஆட்சி காலத்தில் புதிய சீர்திருத்தங்களால் மீண்டும் 8 சதவீத வளர்ச்சி நிலைக்கு திரும்ப இயலும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தற்போதுள்ள 7 சதவீத வளர்ச்சியால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது என்றும் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
Related posts:
|
|