அரசியலில் அதிக நேரத்தை இளைஞர்கள் செலவிட வேண்டும்-போப் பிரான்சிஸ்!

போலாந்து நாட்டிற்கு மேற்கொண்டுள்ள ஐந்து நாள் சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று திறந்தவெளி மைதானத்தில் கூடியிருக்கும் பெரும் திரளான இளைஞர்கள் மத்தியில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை சேவை ஒன்றை நடத்தியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் உலக இளைஞர்கள் திருவிழாவின் ஒரு பகுதியாக தென் நகரமான கிராகோவில் உள்ள மைதானம் ஒன்றில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுக்கிறார்கள் என கணிக்கப்படுகிறது.
மாலையில் போர் பிரான்சில் வழிநடத்திய திருவிழிப்பு ஜபத்தை தொடர்ந்து பலரும் இரவிலிருந்தே அங்கு முகாமிட்டிருந்தனர்.
கணினி, ஸ்மார்ட் போன் மற்றும் வீடியோ கேம்ஸ் உள்ளிட்டவற்றில் இளைஞர்கள் குறைந்த நேரம் செலவிட வேண்டும் என்றும், சமூக செயல்பாடுகள் மற்றும் அரசியலில் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்றும் திருவிழிப்பு ஜபத்தின் போப் இளைஞர்களை வலியுறுத்தி இருந்தார்
Related posts:
விமானம் தரையிறங்கிய போது விபரீதம் : மயிரிழையில்உயிர்தப்பிய 163 பயணிகள்!
தகவல்களைத் திருடியதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவன ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு!
இலங்கையின் பொறிமுறைகள் கொலம்பியாவிற்கு பொருத்தமில்லை!
|
|