அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு – பிரதமர் மோடி பங்கேற்பு!
Monday, July 20th, 2020அயோத்தியில் வரும் ஓகஸ்ற் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு குறித்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் உறுப்பினர்கள், சமயத் துறவிகள் அயோத்தியில் கூடி விவாதித்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி விஜயம் செய்வதை அடுத்து ஓகஸ்ற் மூன்றாம் திகதி அல்லது ஐந்தாம் திகதியில் பூமி பூஜையை நடத்தலாம் என அறக்கட்டளையால் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், பூமி பூஜைக்கான நிகழ்வை ஓகஸ்ற் ஐந்தாம் திகதி காலை எட்டு மணிக்குத் தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி பகல் 11 மணி முதல் ஒரு மணி வரை அங்கிருப்பார் என அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, வாரணாசியைச் சேர்ந்த சமயத் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|