அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Thursday, December 6th, 2018

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு விமானங்கள் ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு அருகில் கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானங்களில் 7 பேர் பயணித்துள்ள நிலையில் , விபத்துக்குள்ளான விமானங்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.