அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்தவர் முகமது அலி!

‘பொக்ஸிங் ரிங்குக்குள் பட்டாம் பூச்சியை போல பறப்பேன், தேனியை போல கொட்டுவேன்” என்பது முகமது அலியின் மிக பிரபலமான வரி.
1964ல் குத்துச்சண்டையில் ஜாம்பவானாக இருந்த சோனி லிஸ்டனை முகமது அலி வீழ்த்தினார். ஜோ ப்ரேஸியருடன் பரப்பரபான சண்டைகளை போட்ட முகமது அலி, ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தி ‘ரம்பிள் இன் த ஜங்கிள்’ பட்டத்தை கைப்பற்றினார் .
இனவெறிக்கு எதிராக கடுமையாக செயல்பட்டவர் முகமது அலி. வியட்நாமுக்கு எதிரான போரின்போது அமெரிக்க ராணுவத்தில் இணைந்து பணியாற்ற மறுத்தது மற்றும் ‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’ என்ற கறுப்பின இஸ்லாம் குழுவில் இணைந்தது ஆகிய நடவடிக்கைகளால் அமெரிக்கர்களின் வெறுப்புக்கு ஆளானார்.
அவரது மத நம்பிக்கைகள் காரணமாக, வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்த்தால், அவரது உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் அவரது குத்துச்சண்டை போட்டிகள் முடங்கிப் போயின.
Related posts:
|
|