அமெரிக்க மாலுமிக்கு சிறை!

ஜப்பானின் ஒக்கினாவா தீவில் ஜப்பானியப் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அமெரிக்க மாலுமி ஒருவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜஸ்டின் காஸ்டெல்லானோஸ் பணிபுரிந்த தீவிலுள்ள ஹோட்டலின் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரோடு பாலியல் வல்லுறவு கொண்டார்.அமெரிக்க இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் ஒகினாவா தீவில் அமெரிக்க படைப்பிரிவுகள் இருப்பதற்கு எதிரான கோபத்தை உள்ளூர் மக்களிடம் எழுப்பியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இன்னொரு ஜப்பானியப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பேர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.
Related posts:
தமிழக மீனவர்கள் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு!
ஜி-7 மாநாட்டில் சர்ச்சைக்குரிய விவாதம்!
குற்றவியல் சட்டத்தினை நவீன மயப்படுத்த வேண்டும் - கியூபெக்கின் நீதி அமைச்சர்!
|
|