அமெரிக்க பாடசாலையொன்றில் மாணவர் ஒருவரது துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தில் இரு மாணவர்கள் உயிரிழப்பு!

Friday, January 26th, 2018

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்;.

பென்டன் நகரில் உள்ள மாரஷல் உயர் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் 11 வயதான மாணவர் ஒருவரே இத்துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதுடன், அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமாக முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: