அமெரிக்க படையினர் மீது ரஷ்யா வான் தாக்குதல்!

Sunday, March 5th, 2017

சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினர் மீது ரஷ்ய விமானப்படையினர் தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என தி நியுயோர்க் டைம்ஸ் செய்தியை ஆதாரம் காட்டி  செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படையினர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம், சிரியா ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டுவரும் கிளர்சியாளர்களை இலக்கு வைத்து ரஷ்ய படையினரும் தாக்குதல் மேற்கொண்டு வருக்கின்றனர்.

இந்நிலையில், கிளர்சியாளர்கள் என நினைத்து அமெரிக்க படையினர் மீது ரஷ்யா விமானப்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் போது அமெரிக்க படையினர் சிலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரஷ்யாவுடன் தொடர்புகொண்ட அமெரிக்க இராணுவ தலைமையகம் இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.