அமெரிக்க பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

Wednesday, February 7th, 2018

அமெரிக்க தொழில்துறை குறியீடான டவ் ஜோன்ஸின்  மதிப்பு, சடுதியான வீழ்ச்சியை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திங்கட்கிழமை ஒரேநாளில் மாத்திரம் ஆயிரத்து 175 புள்ளிகளை இழந்துள்ளது. இது 4.6 சதவீத வீழ்ச்சியாகும்.

இதன் தாக்கம் முழு அமெரிக்க பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போது 777 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததே அமெரிக்காவின் மிக மோசமானதாக கருதப்பட்டது.

இந்தநிலையில், சூழ்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கட்டுப்படுத்த வெள்ளைமாளிகை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்கா மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: