அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதல்: விசாரணைக்கு சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும்: சபாநாயகர் நான்சி பெலோசி!

Wednesday, February 17th, 2021

அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றம் (காங்கிரஸ்) நியமிக்கவுள்ளது என அந்நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
2001 செப்டெம்பர் 11 தாக்குதல் தொடர்பாக விசாரிப்பற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவைப் போன்றதாக நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கான ஆணைக்குழுவும் அமைந்திருக்கும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் கல்லூரி வாக்குகளை எண்ணும் நடவடிக்கை கடந்த ஜனவரி 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது, டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறைகளில் ஈடுபட்டனர். இதனால் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், மேற்படி தாக்குதல் தொடர்பாக சுயாதீன விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts: