அமெரிக்க தூதரகம் மீது தற்கொலை தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

Monday, July 4th, 2016

சவுதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஜத்தா பகுதியில் அமைந்துள்ளது அமெரிக்க தூதரகம். இங்கு தாக்குதல் நடத்தும் பொருட்டு வெடிகுண்டுடன் வந்த தற்கொலை தீவிரவாதியை அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் இனம் கண்டு முறியடித்துள்ளனர்.

தீவிரவாதியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும் எடுத்து வந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் அந்த தீவிரவாதி உடல் சிதறி பலியாகியுள்ளார்.. தாக்குதலை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு பலத்த காயம் ஏற்படுள்ளத்காக கூறப்படுகிறது. அமெரிக்க நாடு தனது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இந்த வேளையில் அந்த நாட்டின் தூதரகம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

عاجل..

تواجد أمني مكثف بعد تفجير انتحاري نفسه بحزام ناسف .#تفجير_القنصلية_الامريكية_بجدة

 pic.twitter.com/ryS6dyUXKe

أخبار السعودية (@SaudiNews50) July 4, 2016

Related posts: