அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!

ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் விமானங்களுக்கான இயந்திரங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தின் முன்னேற்றம் மற்றும் ஆளில்லா விமான கருவிகளை கொள்வனவு செய்யும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர்கள் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இந்தியாவுக்கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜி-20 மாநாடு இந்தியாவில் முதன்முறையாக நடைபெறுகின்றது.
இதில் பற்கேற்பதற்காக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|