அமெரிக்க ஜனாதிபதிக்கு பச்சைக் கொடி காட்டினார் வட கொரிய அதிபர்!

Thursday, April 12th, 2018

அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்தவிருப்பதாக, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார் என வடகொரியாவின் அரச ஊடகம்தெரிவித்துள்ளது.

வடகொரியத் தலைவரை தாம் சந்திக்க விருப்பத்துடன் இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பில் வடகொரியா தொடர்ந்து மௌனம் காத்துவந்தது. தற்போது இந்த விடயத்தை வடகொரியத் தலைவரும் ஒப்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சந்திப்பு தொடர்பான விபரங்கள் எவையும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

Related posts: