அமெரிக்க செனட்டரின் கடுமையான விமர்சனம்!

Wednesday, May 31st, 2017

ரஷ்ய ஜனாதிபதி புடின் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை விட ஆபத்தானவர் என அமெரிக்காவின் செனட்டின் ஆயுதச் சேவைகள் குழுவின் தலைவரான ஜான் மெக்கெயின் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யா, அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது.விரைவில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடையை கொண்டு வருவோம், உலகப் பாதுகாப்புக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை விட புடின் ஆபத்தானவர் என ஜான் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை ஜான் ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: