அமெரிக்க கூட்டுப்படையின் ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ள ரஷ்யா!

gallerye_074448219_2000108 Saturday, April 14th, 2018

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் சிரியா மீது நடத்திய 71 வான்வழி ஏவுகணை தாக்குதல்களை இடைமறித்து தகர்த்துள்ளதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரஷ்ய உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிரியாவின் பல்வேறு நிலைகளை நோக்கி 103 ஏவுகனை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. சிரியாவின் வான்வழிப் பாதுகாப்பை ரஷ்யா முழுமையாக வலுப்படுத்தியுள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவந்ததாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறி அமெரிக்கா தலைமையிலான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டுப்படைகள் சிரியாவில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பில் விமர்சித்துள்ள ஈரான் நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களை குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளார்.