அமெரிக்க குடிவரவு குடியகல்வு கொள்கையில் மாற்றம்!

Thursday, July 18th, 2019

அமெரிக்காவினுள் குடியேற விரும்புவர்கள் தொடர்பான குடிவரவு திட்டங்களை தளர்த்த டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கு அமைய புத்திஜீவிகள் மற்றும் திறமை தகுதியை கொண்டுள்ள விண்ணப்பங்கள் இலகு முறையில் பரிசீலிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், அவரின் மருமகனுமான ஜேர்ட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறைக்கு அமைய சர்வதேச ரீதியாக சிறந்த தகைமையை கொண்டவர்கள் அதிக பலனடைவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைமையான அமெரிக்க குடிவரவு குடியகல்வு கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய திட்டம் குறித்து விரிவாக விளக்கியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எப்படியிருப்பினும் மனிதாபிமான முறையில், பாதிப்படைந்த மக்களை வரவேற்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் சிரேஷ்ட ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: