அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது!

Wednesday, September 2nd, 2020

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான பழங்கால சரக்குக் கப்பலொன்று கடந்த 30 ஆம் திகதி  ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

யு.எஸ்.எஸ்.  டர்ஹாம்(USS Durham) என்றழைக்கப்பட்ட  குறித்த கப்பலே ஈவ்வாறு மூழி;கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பலானது  1969 ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை அதிகமாக பயன்படுத்தப்பட்டதாகவும் அன்றைய காலகட்டத்தில் அமெரிக்கக் கடற்படைக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வதில் இக் கப்பல் பெரும்பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 94 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இக் கப்பலானது  இறுதியாக பசிபிக் கடலில் இடம்பெற்ற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டதென்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: