அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்த ஆடம்பர விடுதிக்கு மேல் மர்ம விமானம் ஒன்ற அத்துமீறி பறந்ததால் பெரும் பரபரப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்த ஆடம்பர விடுதிக்கு மேல் மர்மமான முறையில் விமானம் ஒன்று அத்துமீறி பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் ஜோ பைடன் வார இறுதிநாளான நேற்று(4) மத்திய அட்லாண்டிக் கடற்கரையை அண்டிய டேலேவேர் பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் தனது மனைவியுடன் தங்கியிருந்தார்.
அதிபர் அங்கு தங்கியிருந்ததால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், இத்தகைய பாதுகாப்புகளை மீறி, ஜோ பைடன் தங்கியிருந்த விடுதிக்கு மேல் விமானம் ஒன்று அத்துமீறி பறந்தது.
இதனால், உடனடியாக ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ரேஹோபோத் கடற்கரையில் உள்ள பாதுகாப்பான இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், அதிபரின் பாதுகாப்புக்கோ அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்புக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தின் விமானியிடம் அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்பு சேவை விசாரணையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|