அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி விஜயம்!

Thursday, April 21st, 2016
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் மற்றும் ஈரானுடனான அணு ஒப்பந்தம் ஆகியன தொடர்பில் நிலவும் குழப்பங்களுக்கு நடுவே, அமெரிக்க அதிபர் ஒபாமா சவதி சென்றுள்ளார்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு முன்னதாக, சவுதி மன்னர் சல்மானை ஒபாமா சந்திக்கிறார்.ஈரான் விவகாரம் உட்பட தமது கவலைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று சவுதி அரேபியா நம்புவதாக  தெரிவிக்கப்படுகின்றது
ஒபாமா தனது ஒருவார கால வெளிநாட்டுப் பயணத்தில் பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.

Related posts: