அமெரிக்கா – வடகொரியாவுக்கு  சீனா எச்சரிக்கை!

Sunday, August 13th, 2017

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்ற நிலைமை வலுப் பெற்றுவரும் நிலையில், தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் செயற்பாடுகளையும் தவிர்த்துக்கொண்டு, அமைதியைக் கடைப்பிடிக்குமாறு சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியாவிடமும் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமை காரணமாக தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை கடந்த ஜுலை மாதம் வடகொரியா பரிசோதித்திருந்தது. இதிலிலிருந்து வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் நிலைமை வலுப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: