அமெரிக்கா – ரஷ்யா இடையே மோதல்: பதிலடிக்கு தயார் புடின்!

Saturday, July 29th, 2017

அமெரிக்காவின் அடாவடித்தனமாக பொருளாதார தடைக்கு எதிராக ரஷ்யா உரிய பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி விளாதிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தில் உணர்ச்சிவசப்படாமல் மிகவும் அமைதியான முறையில் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சில நிகழ்வுகளில் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்த செயற்பாடு ஏற்றுக் கொள்ள கூடியதல்ல. இது சர்வதேச உறவுகள் மற்றும் சட்டங்களை அழிப்பதாக புடின் மேலும் தெரிவித்துள்ளார்இதேவேளை, அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும் குறிப்பிட்டு ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய மூன்று நாடுகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், யுக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது இராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: