அமெரிக்கா செல்கிறார் அருண் ஜேட்லி!

arunjaitley Monday, October 9th, 2017

இந்திய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்ற அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.

அமெரிக்காவில் உலக வங்கி, பன்னாட்டு நிதியத்தின் சார்பில் நடைபெறும் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ள அருண் ஜேட்லி அமெரிக்க வர்த்தக செயலாளர், இத்தாலி மற்றும் ஈரானிய நிதி அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கிறார்.

அக்டோபர் 10 ம் தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் சாதனைகள் மற்றும் சவால்கள் குறித்து உரையாற்ற உள்ளார்.  ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித படேல் உள்ளியிட்டோர் அடங்கிய குழுவும் அருண் ஜெட்லியுடன் செல்கிறார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.