அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள வாய்ப்பு- ரஷ்யா !

Wednesday, October 23rd, 2019

நாடுகளிடையே இராணுவ பதற்றங்களை அதிகரிக்க பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் அமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளலாம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்கேய் சோய்கு இதனை தெரிவித்துள்ளார். அணுவாயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையே கடந்த 1987-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

ஐ.என்.எப். என அழைக்கப்படும் நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கை மூலம் நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியதால் ஒப்பந்தம் ரத்தானதாக ரஷ்யா அறிவித்தது.

இந்தநிலையில், நாடுகளிடையே ராணுவ பதற்றங்களை உருவாக்க அமெரிக்கா, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளலாம் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: